- Tuesday
- July 1st, 2025

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதி வழங்கியதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கவிருந்த சேவை முடக்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபையின்...

செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப்...

செம்மணி மனித புதைகுழியில் நேற்று (29) வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம்...

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லுண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் நேற்றையதினம் (29) போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையினர் தமது எல்லைக்குள் சேகரிக்கும் மருத்துவ கழிவு, மலக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, விலக்குக் கழிவு உட்பட பல கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் உள்ள...

நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவதற்காக 17 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அதிகரித்துள்ள...

வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி காலை 6.30 மணிக்கு பயணிக்கும் வவுனியா வீதிக்கு சொந்தமான இபோச பஸ்ஸின் அளவு சிறியதாக உள்ளதால் பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என வவுனியா மாநகரசபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு பொதுமக்களால் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுருந்தது. இதனை கருத்தில் கொண்ட துணை முதல்வர் வவுனியா வீதி முகாமையாளருடன்...