- Wednesday
- May 14th, 2025

தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு வயதான சிறு பிள்ளை உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியதை அடுத்து குடும்பத்தினர்...

வடக்கில் தமிழ் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளத் தர சிங்கள பௌத்த மக்கள் முன்வர வேண்டும் என தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் புத்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வெசாக் போயா தினத்தன்று, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தையிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள...

உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவு படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது....