Ad Widget

மேதகு படத்தின் இசையமைப்பாளர் திடீர் மரணம்!!

2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது. குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன்...

புங்குடுதீவில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!! அகழ்வு பணிகள் ஆரம்பம்!!

புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுடுள்ளது. முன்பதாக புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை...
Ad Widget

பொலித்தீன் பைகளுக்கு இனி கட்டணம் அறவிடப்படும்!!

பல்பொருள் அங்காடிகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடுவதை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு கடந்த 28ம்திகதி அறிவித்துள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதிக்கான...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வு: வெளியானது வர்த்தமானி!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் உயர்வை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 33(1) (அ) ஊதிய சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 136) பிரிவின் கீழ் தொழில் அமைச்சரின் உத்தரவின் மூலம், தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றையதினம் கொட்டகலையில் நடைபெறும்...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்....

மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய...

ஜனாதிபதி தேர்தலை ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரிக்க வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முண்னணி

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வவனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக் கூட்டம் இடம்பெற்றபோது வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்திலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அப்பிரகடனத்தில்,மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ்மக்கள் காலம்...

விக்னேஸ்வரனின் கூற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!! – கிளிநொச்சியில் மனோகணேசன்

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் விக்னேஸ்வரனின் 2ஆம் வாக்கு அளிப்பது பற்றிய கூற்று சந்கேத்தை ஏற்படுத்துவதோடு பொதுவேட்பாளர் விடயத்தினை மலினப்படுத்துவதாகவும் உள்ளதென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும். சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது. இதேவேளை,...