Ad Widget

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி; வழக்கு ஒத்திவைப்பு

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி, அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு...

முல்லைத் தீவில் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றம் அதிகரிப்பு!

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின்...
Ad Widget

யாழில் காணி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக தனது உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய குறித்த...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை ; மேலுமொரு சந்தேகநபர் கைது

வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து...

சம்பந்தனுக்கு மூன்று மாத விடுமுறை!

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குமாறு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நேற்றையதினம் (25) நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரேரணையை உறுதிப்படுத்தினார். 91 வயதாகும் சம்பந்தன் தற்போது நோயி நிலையால்...

முறிகண்டியில் விபத்து: இராணுவ வீரரொருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் ஏ9 வீதியில் இடம்பெற்றிருந்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே...

வடக்கு ஆளுநர் செயலகத்தில் கைகலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும் நபர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட ஆளுநர் செயலக பணியாளர் யாழ்ப்பாணம் பொலிஸ்...

ரஷ்யா – உக்ரைன் போர் – இரகசிய தகவலொன்றை அம்பலப்படுத்திய அமெரிக்கா

ரஷ்ய-உக்ரைன் போரை சூடுபடுத்தும் வகையில் அமெரிக்கா ஒரு சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ரகசியமாக வழங்கியதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்ட $300 மில்லியன் டொலர்கள் (£240m) உதவிப் பொதியின் ஒரு பகுதியாகவும்...