Ad Widget

யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்!!

தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று...

காங்கேசன்துறையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு!!

காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிலையத்தை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக்.சி.ஏ.தனபால இன்று திறந்துவைத்தார். கடற்கரையில் குளிக்கும் போதும், விளையாட்டுக்களில் ஈடுபடும்போதும் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக குறித்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில்...
Ad Widget

பெண் உயிரிழப்பு! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாழ் போதனா வைத்தியசாலை!!!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய...

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும் செயற்பாடு போராட்டத்தால் தடுக்கப்பட்டது

வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ். போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில்...

ஈரானின் பாரிய இராணுவ தளம் , அணு மின்னிலையம் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்

இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் (Israel) தனித்து தனது முடிவுகளை எடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்த ஒரு நாளிலேயே ஈரானில் தாக்கப்பட்டுள்ளது. இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலின் பின்னர் அணுமின் நிலையங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை...