Ad Widget

வலி வடக்கில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை ; மக்கள் எதிர்ப்பினால் அளவீட்டுப்பணி நிறுத்தம்

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்று வெள்ளிக்கிழமை (05) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு...

மாவீரர் நாளை தடுப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான ஆனந்த ஜயமான்னவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கரலியத்த மற்றும் மாயாதுன்னே,...
Ad Widget

மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க நிதி கிடைக்கவில்லை!

முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்று (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம...

இணுவில் புகையிரதக் கடவைக்கு சமிக்ஞை விளக்கு!

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, வியாழக்கிழமை (05) அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி, வேனில் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பத்தினர், இணுவில்...

இலங்கையின் பல பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது!

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 15 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் வலப்பிட்டிய, எல்பிட்டிய, மொறவக்க மற்றும் திஸ்ஸமகராம போன்ற இடங்களுக்கு...