Ad Widget

வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களாக மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர்கள்!!

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வி.பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி செயற்பட்டுவரும் நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பி.கே.விக்கிரமசிங்கவும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள்...

எரிபொருட்கள் விலைகளில் மாற்றம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 440 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய...
Ad Widget

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும்!

மேல், வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மொனராகலை,மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப்...

கார்த்திகைப் பூ இல்லை காந்தள் பூ : ஆசிரியர்களுக்கு “சப்றைஸ்” கொடுக்கவே செய்தோம் – பொலிஸாருக்கு மாணவர்கள் விளக்கம்

தெல்லிப்பழையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் இராணுவ வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். விசாரணைக்காக மூன்று மாணவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணையில்...

ரஷ்யாவிற்கு படையெடுக்கும் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள்!!

நாட்டில் நிலவும் கடினமான பொருளாதார நிலைமை காரணமாக ரஷ்ய குடியுரிமை பெறும் நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர் ஒருவர் மாதம் 3000 அமெரிக்க டொலர் (சுமார் 9 இலட்சம் இலங்கை ரூபா) சம்பளமாக பெறுவதாக இலங்கையர்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது....