Ad Widget

வெடுக்குநாறிமலை விவகாரம்: நீதி கோரி வவுனியாவில் போராட்டம்!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான குறித்த போராட்டமானது தற்போது ஊர்வலமாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்...

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம்: கடற்படையினரிடம் விசாரணை!!

வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சுமத்தியிருந்த நிலையில் கடற்படையினரின் முன்நிலையில்...
Ad Widget

TikTok செயலியை தடை செய்யும் பிரேரணை நிறைவேற்றம்!!

TikTok செயலியை தடை செய்யும் முக்கிய பிரேரணையை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 352 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவில் உள்ள Tik Tok நிறுவனத்தின் சொத்துகளை 6 மாதங்களுக்குள் தடை செய்வது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதால், சுமார் ஆறு மாதங்களுக்குள் TikTok செயலி...

உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தும் அதிகாரிகள் எவரும் சிறைச்சாலைக்கு சமுகமளிக்கவில்லை!!

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட எண்மரில் ஐவர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ள போதிலும், இதுவரையில் அதிகாரிகள் எவரும் சிறைச்சாலைக்கு சமுகமளிக்கவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை...

மே மாதம் வரையில் நீடிக்கவுள்ள வெப்பநிலையுடன் கூடிய வானிலை!!

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையுடன் கூடிய வானிலை எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவி வரும் அதிக வெப்பத்துடனான வானிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் மே மாதம் வரையில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைதல், வளிமண்டலத்தில் நீர் ஆவியாதல் அதிகரிப்பு போன்ற ஏதுக்களினால் வெப்பநிலை...

ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்த பிரான்ஸ் !!

ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு படைகளை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலிருந்து பிரான்ஸ் படைகள் திருப்பி அனுப்பப்படுவதை ரஷ்ய ஜனாதிபதி புடின் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்ய உக்ரைன் போரைத்தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல்...