Ad Widget

யாழில் இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு பயன்படுத்திய கார் மீட்பு!

யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து திங்கட்கிழமை 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (12), யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு...

வெடுக்குநாறிமலை சம்பவம் ; கைதுசெய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதம்!!

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில்...
Ad Widget

வட்டுக்கோட்டை கொலைச்சம்பவம் தொடர்பில் நான்குபேர் கைது!!

வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25, 22 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை...

வெடுக்குநாறிமலை வழக்கு: மேன்முறையீடு செய்யவுள்ளதாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவிப்பு!

வவுனியா, வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட எட்டு அப்பாவி சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு அழைக்கப்பட்டது. பெரும் சட்டப்போரட்டமாகவே அது அமைந்திருந்தது. இருப்பினும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி!

எமக்கான நீதியினை அடைவதற்கு வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி” என்று சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் அறைகூவல் விடுத்துள்ளார். வெடுக்குநாறிமலை வழக்கை பார்வையிடுவதற்காக நேற்று வவுனியா வருகைதந்த அவர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது, இலங்கை பொலிசாரின் அடாவடி அளவு கடந்து செல்வதாகவும், கைது செய்யப்படுவதற்கான...