Ad Widget

வெடுக்குநாறிமலை வழக்கு: மேன்முறையீடு செய்யவுள்ளதாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவிப்பு!

வவுனியா, வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட எட்டு அப்பாவி சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு அழைக்கப்பட்டது. பெரும் சட்டப்போரட்டமாகவே அது அமைந்திருந்தது. இருப்பினும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தவிடயம் தொடர்பாக நாம் மேன்முறையீடு செய்யவுள்ளோம்.

அத்துடன் அந்த எட்டுபேர் மீதும் எந்தவிதமான தவறும் கிடையாது என்பதுடன், அவர்களுக்கு நீதி கிடைக்கின்றவரை தாம் தொடர்ச்சியாகப் போராடுவோம்.

குறித்த சந்தேக நபர்கள் தொல்லியல் சின்னங்களிற்கு சேதத்தினை ஏற்பபடுத்தியதாக தொல்லியல் திணைக்களத்தால் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்யான அறிக்கையினை நீதிமன்றிலே தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், உண்மையில் அவ்வாறான எத்தகைய சேதங்களும் ஏற்ப்பட்டிருக்கவில்லை. அதனை நாம் மேன்முறையீட்டிலும் விளக்கத்தின் போது நிரூபிப்போம் ” இவ்வாறு சட்டத்தரணி சுகாஸ் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts