Ad Widget

இராணுவத்திடம் இருந்து காணியை விடுவிக்குமாறும் கோரிக்கை!!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம் தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை, அந்த...

வடக்கிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் ஐ.நா கரிசனை கொள்ள வேண்டும்!!

சிறுவர்களின் திறன் மேம்பாடு, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் முன்வர வேண்டும் என வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கற்றல்...
Ad Widget

சீரற்ற காலநிலையினால் 15 குடும்பங்கள் பாதிப்பு, 8 வீடுகள் பகுதியளவில் சேதம்!!

சீரற்ற காலநிலை காரனமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 47 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு சீரற்ற காலநிலையால் 8 வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே உஷார்!

அண்மைக்காலமாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கொள்ளைக் கும்பலொன்று தமது கைவரிசைகளைக் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

யாழில் மூளைக் காய்ச்சலால் கிராம சேவகர் உயிரிழப்பு!

மூளைக் காய்ச்சல் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை (14) யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உடுப்பிட்டி வடக்கு ஜே/353 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி வந்தவர். குமாரசாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் காலம் அறிவிப்பு

வரவு செலவு திட்ட முன்வைப்பில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம்(2024.04) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் 2024...

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளது. குறித்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறு பட்டியலிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமை...