Ad Widget

யாழ் சர்வதேச சதுரங்க போட்டிகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. “யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்படும் இப்போட்டித் தொடரில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் சகல...

யாழ்.பல்கலைக் கழக நினைவு தூபி விவகாரம்; ஊழியருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தவரும், தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றிவரும் நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும்...
Ad Widget

காணாமற் போனோருக்கு இழப்பீடு!

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக மேலும்1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் பூநகரி நகர் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய்...

நல்லூரில் வீதித்தடை!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நாளை 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில் பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18 ஆம் திகதி சூரன்போரன்று நண்பகல் 12 மணி...

தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலாக பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை ஜனாதிபதி இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றுவார் !

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்தவகையில், வரவு - செலவு திட்ட உரை இன்று நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை...

வளிமண்டலத்தில் தளம்பல் : நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டிற்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல், வடமத்திய, தென்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில...