- Monday
- December 11th, 2023

இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனம் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்.மாவட்ட செயலகம் முன் இன்று (10) காலை 10.00 மணியளவில் ஒன்றுக்கூடிய கடற்தொழிலாளர்கள் , போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் “இந்திய மீனவர்களே எமது கடல் வளங்களை அழிக்காதே, கடற்படையே அத்துமீறிய இந்திய...

மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக பல்கலைக்கழக...

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மதியம் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வட மாகாணத்திலும் திருகோணமலை...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 27 வயதான இளைஞனும் 19 யுவதியும் நேற்று (9.11.2023) காலை குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் துபாய் செல்வதற்காக நேற்று 01.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களின் ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள்...

யாழ்ப்பாணத்தில் பெரும் பணக்காரர்களை இலக்கு வைத்து நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பில் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பணக்காரர்களை இலக்கு வைத்து அவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னை ஒரு மந்திரவாதியாக அறிமுகம் செய்வதுடன் குறித்த நபர்களுக்கு...

உக்ரைனின் கெர்சன் நகர் மீது ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் பல மாதங்களாக தொடரும் நிலையில், தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. எனினும் இரு நாடுகளும் அவ்வப்போது எதிர் பிராந்தியத்திற்குள் ஏவுகணை ஏவி திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று உக்ரைனின் கெர்சன்...