- Monday
- December 11th, 2023

தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து, புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இப்புதிய சமூக புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் இடம்பெற்றுவரும் தவறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் விதமாகவே இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய...

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்...

மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 40 பேர் அகால மரணமடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 பேர் உயிரிழப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. மதுவின் வருமானத்தை விட மதுவினால் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார சேதம் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது. கடந்த 2015ம்...

கிராம உத்தியோகத்தர் பதவிக்கு சுமார் 3000 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர்...

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (03) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இன்று காலை 8 மணியிலிருந்து நாளை சனிக்கிழமை (03) காலை 8 மணி வரை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வைத்திய அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.