Ad Widget

அடுத்த மாதம் முதல் வீட்டிலிருந்தவாறே கடவுச்சீட்டு பெறலாம்!

எதிர்வரும் ஜீன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைவான கட்டணம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், வங்கிக்...

யாழ்.இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் பலப்பக்கங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ்.இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து பதாகை ஒன்று வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. “தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல நாம், எம் தாயாரின் மரண ஓலங்களை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ad Widget

14ஆவது ஆண்டு நினைவேந்தல் : முள்ளிவாய்க்கால் பிரகடனம்!!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது, இந்நிலையில் போரின் சுவடுகளை தாங்கிய முள்ளிவாய்க்காலில் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் ஆரம்பம்!!

முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி இடம்பெற்று வருகின்றது.

கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த யாழ் இளைஞனை 7 மாதங்களாக காணவில்லை!

கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார். மயிலிட்டி - தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல்போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்தும் இதுவரை...

வடமாகாணத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு!! – ஆளுநர்

வடமாகாணத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தொிவித்திருக்கின்றார். வடமாகாண ஆளுநராக நேற்று (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டதன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு மக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்புக்களை அர்ப்பணிப்புடன் வழங்குவததாக உறுதியளித்துள்ளார். தாரளமான மனதுடைய...

கொத்தணி குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டவர்களை தனித்தனியாக நினைவுகூர முடியாது – சி.வி.கே

மே 18 அன்று கொத்துக்கொத்தாக இறந்தவர்களை தனித்தனியாக நினைவு கூரவேண்டும் என்ற தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்திற்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம் தெரிவித்துள்ளார். கொத்தணி குண்டுகள் காரணமாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலையை தனித்தனியே நினைவுகூர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இறுதி யுத்தத்தின் போது மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை கூட்டாகவே நினைவு கூருவோம் என சி.வி.கே.சிவஞானம்...

போர் பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவில் கடுமையாகும் சட்டம்!

இராணுவ சட்டத்தின் கீழ் குடிமக்களை கட்டாயமாக நாடு கடத்தும் முறை ரஷ்யாவின் டுமா மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனது படைகளை அனுப்பி தொடர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கட்டாயமாக நாடு கடத்தும் முறை ரஷ்யாவின் டுமா மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இராணுவ சட்டத்தின்...