Ad Widget

போர் பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவில் கடுமையாகும் சட்டம்!

இராணுவ சட்டத்தின் கீழ் குடிமக்களை கட்டாயமாக நாடு கடத்தும் முறை ரஷ்யாவின் டுமா மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனது படைகளை அனுப்பி தொடர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கட்டாயமாக நாடு கடத்தும் முறை ரஷ்யாவின் டுமா மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இராணுவ சட்டத்தின் துணையுடன் மாநிலங்களில் வசிக்கும் மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வதை அரசு சட்டபூர்வமாக்க விரும்புவதாக அரசியலமைப்பு சட்டம் மற்றும் மாநில கூட்டமைப்புகளின் கவுன்சில் குழு தலைவர் ஆண்ட்ரி கிளஷாஸ் கூறியுள்ளார்.

இந்த இராணுவ சட்டம் தற்போது உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 4 பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆணைகளை மீறியதற்காக குறித்த பிராந்தியங்களில் வசிப்பவர்களை 30 நாட்கள் வரை காவலில் வைக்க இந்த சட்டதிருத்தங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts