Ad Widget

தீயில் கருகிய நிலையில் மலசலகூடத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம்!!

கோப்பாயில் நேற்று (16) மாலை முதியவர் ஒருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் மலசலகூடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை மரண பகுதியில் கார்த்திகேசு திருப்பதி (திருப்பதி மாஸ்டர்) எனும் 65 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனிமையில் வசித்து வந்த இவரது...

இமானுவேல் ஆனோல்ட் சரீரப் பிணையில் விடுதலை!!

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு சரீரப்...
Ad Widget

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரிய வழக்கு தள்ளுபடி!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கை தொடர காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில்...

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கைது!

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலை யாழ் மாநகர...

புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். அதன்படி இன்று (புதன்கிழமை) வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண...

நீடிக்கும் கடுமையான வெப்பம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், வடக்கு, வடமத்திய,...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் தொடர்புடைய முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்...

ரஷ்ய-உக்ரைன் போரில் திடீர் திருப்பம்! சமாதான பேச்சுவார்த்தை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

மாதான திட்டம் குறித்து விவாதிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்ய போரினால் உலகின் பல நாடுகள் பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய உக்ரைன்-ரஷ்ய போரை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பது குறித்து ஆப்பிரிக்க தலைவர்கள்...