நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரிய வழக்கு தள்ளுபடி!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கை தொடர காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் காவல்துறையினரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகி கடந்த ஏப்ரல் 18ம் திகதி வழக்கு விசாரணையின் போது நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Related Posts