- Thursday
- June 8th, 2023

நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர்...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகம் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்த்தை முன்னிட்டு இன்று, அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், திருமதி...

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10.05.2023 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன்போது ஏ-9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாரும்...

நாவாந்துறை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் மன்னார் பகுதியில்பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரிவீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில்...

தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ஆம் திகதி தொடங்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும்...

நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். நேற்று (15) மாலை வேளை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் குடும்பப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் 15.05.2023 பாதிவாகியுள்ளது. முல்லைத்தீவு எல்லைப்பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியர் ஒருவர் காட்டிற்குள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் குறித்த பெண்ணை காட்டிற்குள்...

டக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் நேற்று (15.05.2023) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17.05.2023) நியமிக்கப்படவுள்ளனர் . வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே ஜனாதிபதியால்...

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். [caption id="attachment_99954" align="aligncenter" width="1000"] Arrested man in handcuffs with hands behind back[/caption] குறித்த சம்பவம் நேற்று (15.05.2023) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய முன்றலில் மாடு கடத்தலில் ஈடுபட்ட போது பிரதேச...

கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (15.05.2023) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாக தெரியவருகிறது. 2.1 ரிக்டர் அளவான சிறியளவு நிலநடுக்கமே பதிவாகியுள்ளது. இந்த விடயத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.