Ad Widget

ஆகஸ்ட் முதல் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட தடை -யாழ் அரச அதிபர்

யாழ்  மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ்  மாவட்ட  செயலர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில்  வாடகைக்கு செலுத்தும்  முச்சக்கர வண்டிகளுக்கு...

யாழில்.ஒருவருக்கு மலேரியா

யாழ்ப்பாணத்தில் ஒருவர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் மலேரியா நோயின் உள்ளூர் தொற்று இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை உள்ளுர் பரம்பல்...
Ad Widget

மையல் எரிவாயுவின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு!

சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ 100 ரூபாய் குறைக்கப்பட்டு 3,638 ரூபாயாகவும் 5 கிலோ 40 ரூபாய் குறைக்கப்பட்டு 1,462 ரூபாயாகவும் 2.3 கிலோ 19 ரூபாய் குறைக்கப்பட்டு 681 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்!

நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

இலங்கையில் பனிஸ் ஒன்றின் விலை 23,200 ரூபா!!!

இலங்கையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் எனும் பேக்கரி உணவுப்பொருள் 23,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது . அனுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள மகளிர் சங்கமொன்றினால் இந்த கிம்புலா பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. குருநாகல் கொலனியா விகாரையில் நடைபெற்ற ஏலத்தின் போது 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பனிஸ் 2 அடி நீளம், 1 அடி...

உக்ரைன் மீதான போர் தந்திரோபாயங்களில் மாற்றம்: ரஷ்யாவின் பயங்கர திட்டம் அம்பலம்

உக்ரைன் மீதான ரஷ்ய போர் ஓராண்டை கடந்து இன்று 433 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் தந்திரோபாயங்களை ரஷ்யா மாற்றி உள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா சமீபத்தில் ஏவிய 18 ஏவுகணைகளில் 15-ஐ உக்ரைனிய...