Ad Widget

வடமாகாணத்தில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

வடமாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் ஆண்டுகளில் சுமார் 103 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் 49 பாடசாலைகளும்,...

எரிபொருள் விலை குறைப்பு!! – அமைச்சர் அறிவிப்பு

அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மீதான விவாதத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது என்றும் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆகவே எரிபொருள் விலையில்...
Ad Widget

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி!

ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலை நேற்றை தினத்தை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. நாட்டில் உள்ள முக்கிய வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின்படி இன்று டொலரின் கொள் விலை 314 ரூபாயாகவும் விற்பனை விலை 330 ரூபாயாகவும் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தை இராணுவத்திரிடம் கையளிப்பு??

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் இராணுவத்திற்குத் தாரைவார்க்கப்படவில்லை என கூறியுள்ள மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஷ்வரன், ஆனால் கடந்த வருடம் குறித்த கட்டிடத்தை தமக்கு வழங்குமாறு இராணுவ தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டமை உண்மை எனினும் அந்த கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சு நிராகரித்துவிட்டது எனவும் கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக...

மதுபானம் பருக்கி சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு!! இருவர் கைது!

அச்சுவேலி - தென்மூலை பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சட்ட மருத்துவ வல்லுனர் முன்னிலையில் இடம்பெற்ற பரிசோதனையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை மற்றும் சிறுமி போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. அச்சுவேலி தென்மூலை...

IPL போட்டியில் யாழ் வீரர் வியாஸ்காந்த்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும்,...

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி மகிழ்ச்சியளிக்கின்றது – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான தருணத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த உதவியினால் இலங்கையின் நிலையை மேம்படுத்துவதற்கும் சர்வதேச மூலதனச் சந்தைகளை...

முல்லைத்தீவு கிராம மக்களுக்கு சொந்தமான நிலங்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லையில் உள்ள தமிழ் கிராமமான கொக்குத்தொடுவாய் கிராமத்தின் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை சுவீகரிக்கும் நோக்கோடு அளவீடுகளை செய்து காணிகளுக்கு நடுவே எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நில அளவை திணைக்களம் காணி...

3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை!!

தடைசெய்யப்பட்ட 3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, ◾Fast3Cycle International Pvt Ltd ◾Sport Chain App Sport Chain ZS Society ◾Srilanka Onmax...

சீன ஜனாதிபதியிடம் புடின் பகிரங்கமாக வெளியிட்ட கருத்து

சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வேகமான வளர்ச்சியை கண்டு ரஷ்யா சற்று பொறாமை கொண்டது என்று ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கின் அரசுப் பயணத்தின் தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின், முறைசாரா...