Ad Widget

நாளை வடக்கு கிழக்கிலும் சுகாதாரத்துறையினர் வேலை நிறுத்தம்!

இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. அதற்கமைய நாளை (8) வடக்கு கிழக்கில் உள்ள ஸ்ரீ லங்கா சுகாதார சேவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சுகயீன விடுமுறைப் போராட்டம் மேற்கொள்ளவிருக்கின்றனர். அதேவேளை நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Ad Widget

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியா குட்செட்வீதி,உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்ப்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த...

ஏனைய பரீட்சைகளும் தாமதமாகலாம் – ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், ஏனைய பரீட்சை அட்டவணை திட்டமிடல்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். நாளாந்த ஊதியம் 2,000 ரூபாய் என வரம்புக்குட்படுத்தப்பட்டதன் காரணமாக ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர்...

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைகிறது! 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் – ஆறு திருமுருகன்

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்கின்ற நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் எச்சரிக்கை விடுத்தார். கடந்த சனிக்கிழமை யாழ் உரும்பராயில் இடம் பெற்ற ஞான வைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் பொருட்கள் வழங்கும்...

மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல்!!

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. உடைந்து விழும் நிலையில் உள்ள அந்தக் கட்டடத்திற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளமை காரணமாக அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் குறைவடையும் சாத்தியம் !!!

ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும்...

பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் – விக்னேஸ்வரன்

இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும். வட, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாததாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு...

100 ரூபாவாக குறைகிறது பாணின் விலை! வெளியானது தகவல்

பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்ப்பதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்புக்கு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையைக் குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள வெதுப்பகத் தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாண் உள்ளிட்ட உணவு...

தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம் !பிரித்தானிய உளவுத்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவின் கடுமையான அழுத்தத்தின் கீழ் உக்ரைனிய பாதுகாப்பு படைகள் இருப்பதாக தகவல்...