Ad Widget

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக டக்ளஸ்!!

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார். இருவருக்குமான நியமன கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்றைய தினம் (வியாழக்கிழமை) வழங்கி வைத்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணம் அனுப்பியுள்ள யாழ்.இளைஞன்!

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்”...
Ad Widget

மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 2 காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க இந்திய அதானி குழுமத்துக்கு அனுமதி!

மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 350 மெகாவோட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை இலங்கை முதலீட்டு சபை நேற்று இந்திய அதானி நிறுவனத்திற்கு வழங்கியது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் இந்திய அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்....

நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது – ஜனாதிபதி

நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தற்போதை சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கான நிதி இல்லையென கடந்த டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாகவும்...

நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்தார் சஜித்! தல்செவன காணியை பெற்று தருமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் (வியாழக்கிழமை) நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்...

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப் பகிஷ்கரிப்பு!

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான...

யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் சஜித்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள நிலையில் அவர் பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும்...

காணிகளை கையெற்க தயக்கம் காட்டும் பொது மக்கள்!

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த...

யாழ்.போதனாவில் மருத்துவ கழிவுகள் தேக்கம்?

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே யாழ்.வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பயன்...

பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் ஆளுநர் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

வட மாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடி நீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண மக்கள் அருந்தும் நீர் பாதுகாப்பு தொடர்பில் ஆளுநர் என்ற வகையில் உரிய பொறுப்பை நிறைவேற்றுவேன். வட மாகாண நீர் வழங்கல் வடிகால் அமைப்புச்...

ரஷ்யாவை தாக்க திட்டமிடவில்லை! அமெரிக்கா தெரிவிப்பு

போலந்து விஜயத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுவது போல் ரஷ்யாவை தாக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிடவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எனவே ரஷ்ய அதிபரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தாக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் கூறிய கருத்திற்கு அமெரிக்க...