Ad Widget

இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50 பேர் வைத்தியாசலையில்!!

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்சியில் லேசர் கதிரொளிகள், புகைகள் (ஸ்மோக்) போன்றவை...

யாழ் போதனாவில் தண்ணீரில் கிருமித்தொற்று!! 400 பேர் வரை பாதிப்பு!!

யாழ்.போதனா வைத்தியசாலையின் தண்ணீரில் கிருமித்தொற்று இதனால் சுமார் 400 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர். குறித்த சம்பவம் சீர்செய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் போதனா வைத்தியசாலையில் தேங்கும் கழிவு நீர்...
Ad Widget

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம்!

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவியியல் மற்றும் சுரங்க பணியகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் குறித்த பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய வரிக் கொள்கை, சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை – ஜனாதிபதி

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாத நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை இலங்கை இழக்கவும் நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண...

உற்பத்தித்துறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் – ஆர்.ஜெயசேகரம்

உற்பத்தித்துறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் வணிக கழகத்தின் தலைவர் ஆர்,ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் மின்சார கட்டணங்கள் 66% அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பல்வேறு துறைகளிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே உற்பத்தித்துறை சார்ந்தோருக்கு அரசாங்கம்...

போரை தொடங்கியது அவர்கள் தான்! ரஷ்ய அதிபர் அறிவிப்பு

ரஷ்யா - உக்ரைன் மீது போர் தாக்குதலை தொடங்கி ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில் ரஷ்ய ஜனாதிபதி முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது ‘‘மீண்டும் சொல்கின்றோம்.போரை தொடங்கியது அவர்கள் தான்! நாங்கள் போரை நிறுத்தவே பலத்தை பிரயோகித்தோம்’’ என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்றத்தில் யுத்த ஓராண்டு நிறைவையொட்டி கருத்து தெரிவிக்கும் போதே இதனை...