Ad Widget

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமான இப்போராட்டம் அங்குள்ள யுத்த நினைவு சின்னம் வரை இடம்பெற்றது. இதன்போது, தமது கைகளை கட்டியவாறு, தமது உறவுகளின் படங்களையும், கறுப்பு கொடிகளையும் கரங்களில் ஏந்தி உறவுகள்...
Ad Widget

தொடருந்து பேருந்து விபத்து!! மூவர் காயம்!!

கிளிநொச்சியில் பேருந்து மீது தொடருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்றைய தினம் (20.02.2023) காலை 8.15 மணியளவில் கிளிநொச்சி - அறிவியல் நகர் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற அரச பேருந்து, தொடருந்து கடவையைக் கடக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து முறிகண்டி நோக்கிப் பயணித்த யாழ்....

இனி பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைகளில் இருந்தபடியே ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி பணிபாளருடன் பேசலாம்!

வடமாகாண பாடசாலைகளில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் தமது பாடசாலைகளில் இருந்தவாறே வடமாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளருடன் தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் ஆளுநருடன் பேச முடியும்....

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராகவும் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் சபை உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அண்மையில் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் உறுப்பினர் பா.பத்மமுரளி “வைக்கோல் பட்டறை நாய் போன்று சிலர் செயல்படுவதாக” தெரிவித்தார். இதற்காக உறுப்பினர் பா.பத்மமுரளி மாநகர சபை நடவடிக்கையில் பங்கேற்க ஒரு...

தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் – மாவை சேனாதிராஜா

இனப்பிரச்சினை, நில விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகவே செயற்படுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான், கூட்டமைபின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா, தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் கூட்டமைப்பாக...

ஜேர்மன் பிரஜையால் கிளிநொச்சியில் தரைமட்டமாக்கப்பட்ட வீடு! வீதிக்கு வந்த குடும்பம்

கிளிநொச்சியில் 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வசிக்கும் ஓர் குடும்பத்தினரின் வீட்டை,வெளிநாட்டு பிரஜை ஒருவர் இடித்து தரைமட்டமாக்கியுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பரந்தன் 3ஆம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரை, ஜேர்மனியில் இருக்கும் ஒருவர் ஜே.சி.பி வைத்து அவர்களது வீட்டை இடித்து தரைமட்டமாகியது மற்றுமன்றி குடும்ப உறுப்பினர்களை மதுவிற்கு அடிமையானவர்களின்...

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை 2023ஆம் கல்வியாண்டுக்குரிய உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். 2022ஆம் ஆண்டிற்குரிய கல்விப் பொதுத் தராதர...

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் 30 ஆயிரம் பேரை கொன்று குவித்த உக்ரைன்!!

உக்ரைன் போரில் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பு பகுதிகளை இலக்காக கொண்டு அடுக்கடுக்காக ஏவுகணைகளை ரஷ்யா வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், கீவ் நகரில் இருந்து 274 கி.மீ. தொலைவில் உள்ள மெல்னைட்ஸ்கி நகரில் நேற்று காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன....