Ad Widget

தொடருந்து பேருந்து விபத்து!! மூவர் காயம்!!

கிளிநொச்சியில் பேருந்து மீது தொடருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்றைய தினம் (20.02.2023) காலை 8.15 மணியளவில் கிளிநொச்சி – அறிவியல் நகர் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற அரச பேருந்து, தொடருந்து கடவையைக் கடக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து முறிகண்டி நோக்கிப் பயணித்த யாழ். ராணி புகையிரதம் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts