Ad Widget

திருக்கோணேஸ்வரத்தை இந்தியா பொறுப்பேற்று பாதுகாக்க வேண்டும் – ஆறுதிருமுருகன்

கிழக்கு மாகாணத்தில் இந்தியத்துணைத்தூதுவராலயம் அமைக்கப்படவேண்டும் எனக்கோரிகை முன்வைத்துள்ள அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் திருக்கோணேஸ்வரம் இந்திய அரசாங்கம் பொறுப்பேற்று அதனைப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும்...

ஆசிரிய நியமனத்தை இளம் பட்டதாரிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை!

ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், ‘வேலையில்லாப் பட்டதாரிகள் அமைப்பின் ஊடாக அறியத் தருவது யாதெனில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள...
Ad Widget

இலங்கையின் சில பகுதிகளில் நிலநடுக்கம்!

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு நீதிமன்றம் அனுமதி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே உறுதிமொழி அளித்துள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு...

பாழடைந்த வீட்டிலிருந்து 10 பேர் கைது!!

யாழ்.நகரை அண்டியுள்ள பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பாழடைந்த வீடு ஒன்றில் கூடி ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான வைத்தியர் எஸ்.சிவரூபன் 3 வருடங்களின் பின் பிணையில் விடுதலை!!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சின்னையா சிவரூபன் பிணையில் விதலை செய்யப்பட்டுள்ளார். பிரபல சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவின் நீண்ட வாதங்களின் தொடர்ச்சியாக வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் கிளிநொச்சி மேல்நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு ஓகஸ்ட் 18ம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். 3வருடங்களிற்கு மேலான...

இலங்கைக்கு மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி?

வெளிநாடுகளால் நிராகரிக்கப்பட்ட மனித பாவனைக்கு தகுதியற்ற கழிவுகளுடன் கூடிய அதிகளவிலான தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா தெரிவிக்கையில், கடத்தல்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட...

ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை – சுமந்திரன்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு,அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. சமஷ்டி தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து விட்டு தற்போது குட்டிக்கரணம் அடித்ததை போல் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார். ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது,சமஷ்டி முறைமையில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்...

24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் தொடர்பில் உக்ரைன் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தங்களுக்கு எதிரான போரில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் 1,030 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் போர்...