யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம்!

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் (புதன்கிழமை) இப் போராட்டம் இடம்பெற்றது. இதன் போது “அநீதியான வரிவிதிப்பை நிறுத்து”, “அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கிறது”, “பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி எங்களிடம் கேட்பது அநீதி”...

இலங்கையில் மீளவும் பெட்ரோல் விலை அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய , புதிய விலை லீட்டருக்கு ரூபா 400 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தத்துடன், லங்கா ஐஓசியும் நேற்று நள்ளிரவு...
Ad Widget

வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

உக்ரைனை கைவிட்ட பிரித்தானியா!!

உக்ரைன் - ரஷ்ய போர் 343 ஆவது நாளாக நீடித்துள்ள நிலையில் ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என உக்ரைன் விடுத்த கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் நிராகரித்தமையை உறுதி செய்துள்ளது. தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறைக்கு சாத்தியமல்லை எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம்...