Ad Widget

உக்ரைனை கைவிட்ட பிரித்தானியா!!

உக்ரைன் – ரஷ்ய போர் 343 ஆவது நாளாக நீடித்துள்ள நிலையில் ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என உக்ரைன் விடுத்த கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் நிராகரித்தமையை உறுதி செய்துள்ளது.

தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறைக்கு சாத்தியமல்லை எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உக்ரைனுக்கு RAF Typhoon மற்றும் F-35 போர் விமானங்களை வழங்குவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை.தொடர்புடைய விமானங்களை இயக்க உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க கால தாமதமாகலாம்.

மேலும், பிரித்தானியாவின் RAF மற்றும் F-35 போர் விமானங்கள் மிகவும் அதிநவீனமானவை என்பதுடன், அந்த விமானங்களை இயக்க பயிற்சி மேற்கொள்ள பல மாதங்கள் ஆகும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்ய படைகளின் தாக்குதலை முறியடிக்க ஆயுத உதவி அதிகளவு தேவையென அமெரிக்க உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்த நிலையில், உக்ரைனுக்கு எப்-16 பைட்டர் போர் விமானத்தை அமெரிக்கா அனுப்பாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts