- Tuesday
- May 13th, 2025

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் மத்திய...

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும் இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும்...

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர். அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு...

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தகாத முறையில் இருவர் நடந்துக்கொண்டுள்ளனர். கடந்த 17ஆம்திகதி வீட்டில் யாருமற்ற நிலையில் 45வயது மதிக்கத்தக்க நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண் தனித்திருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர் குறித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த பெண் கூக்குரலிட்ட நிலையில் வீட்டிலிருந்த தொலைபேசி...

கையடக்க தொலைபேசிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைமையொன்றை தயாரித்து வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அட்டை தேவையில்லை எனவும், அது கையடக்க தொலைபேசிக்கு வழங்கப்படும் எனவும்...

கடினமாக இருந்தாலும் மக்கள் வரிச்சுமையை சுமக்க வேண்டும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். 45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் உள்ள அனைவரிடமும் வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்த போதிலும், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அதனை 100,000...

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை வழங்கினால், அதற்கான தண்டனையை உக்ரைன் மக்கள் அனுபவிப்பார்கள் என ரஷ்யா எச்சரித்துள்ளது. கரடு முரடான பாதைகளில் கூட மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய லியோபர்டு கவச பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்க ஜெர்மனி தொடர்ந்து தயக்கம் காட்டிவருகின்றது. இருப்பினும் அமெரிக்கா, பித்தானியா போன்ற நாடுகள் வலியுறுத்தியும் ஜெர்மனி தயக்கம்காட்டுவது, நேட்டோ...