- Tuesday
- May 13th, 2025

இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவத்தார். அரசாங்க...

யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று(புதன்கிழமை) காலை 10.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று முன்தினம் அமைச்சரவை வழங்கியது. இவருக்கான நியனக் கடிதங்கள் நேற்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவால் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை சர்வமதத்...

யாழ்.மாநகர சபையில் நாளை(வியாழக்கிழமை) நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்ட்டினை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு...

இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான நிலையில்...

யாழ்.நகரை அண்டிய பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயற்சித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளினால் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என்று...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் தற்போது பாரிய சவாலாக காணப்படுகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “நாட்டின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், கட்டம் கட்டமாக தற்போது முன்னேற்றமடைந்துக் கொண்டு வருகின்றன. கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியாவுடனும்...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது,...

யுவதியொருவரை அநாகரிகமாக திட்டிய இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சாரதி மன்னிப்பு கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை சாலையை சேர்ந்த பேருந்து சாரதியொருவரே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை - யாழ்ப்பாணம் மார்க்கத்தில் பயணிக்கும் யுவதியொருவர் பருவகாலசீட்டு பெற்று பயணம் செய்து வந்துள்ளார். ஆவரங்காலிற்கு அண்மித்த பகுதியில் அவர் பேருந்தில் ஏறுவது...

நெடுந்தீவுக்கு இதுவரை காலமும் இலவசமாக சென்ற கடற்பயணத்திற்கு எதிர்காலத்தில் பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். படகு திருத்தத்திற்கு தேவையான பணம் கிடைக்காமை இதற்கான காரணமாகும். சேவையில் ஈடுபடும் இரண்டு படகுகள் தற்போது சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் மக்களுக்கு சரியான முறையில் சேவையை வழங்க முடியாதுள்ளது. இதற்கு...

உக்ரைன் மீது ரஷியா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட 11 மதங்கள் ஆகின்றன. ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல உயிர்கள் பலியாகி உள்ளன. ஏராளமானோர் உயிருக்கு பயந்து வீடுகளை...