Ad Widget

சிங்கள மொழிப் பயிற்சி ஆசிரியர்களை இணைக்க வடக்கு ஆளுநர் பணிப்புரை

இரண்டாம் மொழி சிங்கள டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்களை வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற இரண்டாம் மொழி சிங்கள கற்கை...

வடையில் கரப்பான் பூச்சி : விற்பனை செய்த கடைக்கு தண்டம் அறவீடு

கடந்த மாதம் 04.12.2022 ம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், அன்றையதினமும் மறுதினமும் யாழ் நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்டன. அத்துடன் குறித்த உணவகத்திற்கு வடை தயாரித்து வழங்கும் சமையற்கூடமும் இனங்காணப்பட்டது....
Ad Widget

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் செலுத்தப்பட்டது. யாழ் மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.

யாழில் தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் த.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. யாழ் மாவட்டத்திலுள்ள...

வலி வடக்கில் 108 ஏக்கர் காணி மிக விரைவில் விடுவிப்பு – ஜனாதிபதி

யாழ்.வலி,வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 108 ஏக்கர் பொதுமக்களின் காணி இம்மாத இறுதிக்குள் மக்களிடம் மீள வழங்கப்படும். என இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் உறுதியளித்துள்ளனர். மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் முப்படை தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் ,...

அரச ஊழியர்களுக்கான விடுமுறைகள் குறித்த அறிவிப்பு

நாட்டில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது. இந்தநிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல் மற்றும்...

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளர்களின் எண்ணிக்கை 871 எனவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 846 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 224 நோயாளர்களும், கண்டியில் 190 நோயாளர்களும் இந்த வருடத்தின்...

11 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை, தாயின் சகோதரியின் கணவனால் ( பெரியப்பா) துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால் , குழந்தையின் தாய் குழந்தையை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார். வைத்திய...

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவோம் : யாழில் ஜனாதிபதி

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்...

யாழில் பொலிஸாரின் நீர்த்தாரை பிரயோகத்தில் குளித்த இளைஞர்கள்!

தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தினை சிறப்பிப்பதற்காக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லூர் சிவன் ஆலயத்தை வந்தடைந்தார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. அவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மேற்கு இந்தோனேசியாவில் இன்று (16.01.2023) அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் ஆழத்தில் மையமாக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இருந்தபோதும் இந்தோனேசியாவின்...

பதவியில் இருந்து ஓய்வு பெறும் புடின்! கருங்கடலில் இரகசிய மாளிகை

உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய ஜனாதிபதி புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற திட்டமிட்டு வரும் புடின் புடின் ஆற்றும் உரைகளை எழுதிக்கொடுக்கும் பொறுப்பிலிருந்தவரான Abbas Gallyamov என்பவர், புடின் தனது ஜனாதிபதி பதவியிலிருந்து...