Ad Widget

11 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை, தாயின் சகோதரியின் கணவனால் ( பெரியப்பா) துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால் , குழந்தையின் தாய் குழந்தையை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.

வைத்திய பரிசோதனையின் போது , குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாயின் சகோதரியின் கணவனே குழந்தையை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts