Ad Widget

முல்லைத்தீவு-கேப்பாப்பிலவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் கேப்பாப்புலவு இராணுவ முகாமின் பிரதான வாயிலின் முன்பாக இடம்பெற்றுள்ளது. இதன் போது எமது நிலம் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, எங்கள் சொந்தக் காணிகளுக்குள் இராணுவ முகாம் வேண்டாம் உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகளைத்...

யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸனுக்கு இடமாற்றம்?

யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமைச்சு ஒன்றின் செயலாளராக அவர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், அவருடைய இடத்திற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமத ரூபாவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டச் செயலராக வேறு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Ad Widget

தாழமுக்கம் இலங்கை கரையை கடந்து செல்வதாக தெரிவிப்பு!

நாட்டின் மேற்கு திசையில் வலுப்பெற்ற தாழமுக்கம், இலங்கை கரையை கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், வடக்கு, வட மத்திய, கிழக்கு, மேல், சபரகமுவ, வட மேல் மாகாணங்களில் இன்று(செவ்வாய்கிழமை)...

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அமுலாகும் புதிய நடைமுறை

28 இலட்சம் பேர் அங்கத்துவம் வகிக்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பங்களிப்புத் தொகை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒன்லைன் ஊடாக மட்டுமே பரிமாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்....

மீண்டும் இன்று முதல் மின்வெட்டு! வழங்கப்பட்டது அனுமதி

நத்தார் பண்டிகை காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் (27.12.2022) முதல் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்த மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் என...