Ad Widget

தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது – இரா.சம்பந்தன்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சம்பந்தனை பதவி விலக்கி, வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக நேற்று நடைபெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

மீண்டும் ஆரம்பமானது யாழ் சர்வதேச விமான நிலைய சேவை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று காலை 10.50 மணியளவில் அளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட எலையன்ஸ் ஏர் விமானம், யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து மீண்டும் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும்...
Ad Widget

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று (12) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், குறித்த அபாய நிலை நீங்கியுள்ளதால், இன்று முதல் வழமை போன்று பாடசாலைகளை...

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது!!

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது என்றும் அதுவே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இதனை...

பொருளாதார நெருக்கடி காரணமாக 200 பில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் அடகு வைப்பு!!

கணக்கெடுப்பொன்றின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக 200 பில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் 193 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. உரிமம் பெற்ற 13...

ரஷ்யா- உக்ரைன் போர்: உலகம் முழுவதும் 67 பத்திரிகையாளர்கள் படுகொலை

ரஷ்யா- உக்ரைன் போர், மெக்சிகோ வன்முறை போன்ற பல்வேறு காரணங்களால், 2022ஆம் ஆண்டு உலகம் முழுதும், 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, “இந்தாண்டு மட்டும் உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த வன்முறைகளில், இதுவரை...