Ad Widget

எங்கள் கடலையும் நிலங்களையும் தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் – அங்கஜன்

எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் லாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில், நீர்ப்பாசன துறைகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று விவசாயம், மீன்பிடி,...

பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள உயர்தர மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா – ஜனாதிபதி நிதியம் அறிவிப்பு!

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத் திட்டத்திற்கு, தகுதியுடைய மாணவ,...
Ad Widget

மருந்து பொருட்களை கோரி வவுனியாவில் போராட்டம்!

மருந்து பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது. வவுனியா குருமண்காடு சந்தியில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் இலங்கை அரசே அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய் என்ற பாதையை தாங்கியிருந்தனர். குறித்த போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு!

உள்நாட்டு சமையல் எரிவாயுயின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ 250 ரூபாய் அதிகரித்து 4,610 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 5 கிலோ எரிவாயு 100 ரூபாய் அதிகரித்து 1,850 ரூபாயாகவும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது!

லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது. நள்ளிரவு முதல் நடைமுறை இதன்படி, ஒரு லீட்டர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் தற்போது 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்...

நாட்டின் வடபகுதிகளில் கனமழை பெய்யும்!!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்கமானது இன்று (6) தென்கிழக்கு வங்கக்கடலில் தாழமுக்கமாக வலுப்பெற்று இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மேலும் படிப்படியாக வலுவடைந்து ஒரு சூறாவளியாக மாறி டிசம்பர் 08 ஆம் திகதிக்குள்...

இலங்கையில் மரண சான்றிதழ்களில் மறைக்கப்படும் உயிரிழப்பு காரணங்கள்!

இலங்கையில் தற்போது நிலவும் இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுக்கான மருத்துவ பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்றும் இலங்கை தாதியர்...

நாளாந்தம் 6 மணித்தியால மின் தடை அமுலாகும் சாத்தியம்!!

அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை தொடர்பில் நேற்று...

ரஷ்யர்களின் செயலால் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ரஷ்யாவின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின இந்த தாக்குதலால் சபோரிஜியாவிலுள்ள வீடுகள் சேதமாகியுள்ளடதுடன் மின்சாரத் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த டெலிகிராம் ஏவுகணைகள் சபோரிஜியாவிலுள்ள கட்டிடங்களில் விழுந்து நொறுங்கியதாக ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோ தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன்...