Ad Widget

கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்து

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். எனவே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீண்டும் பின்பற்றினால் இந்த வைரஸ் நிலைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என அவர்...

வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் தேவை!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி கருத்து தெரிவிக்கும் போது, அங்கிருந்து...
Ad Widget

சமபோஷ விற்பனைக்கு நீதிமன்றம் தடை

சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொறவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இந்தப் பொருட்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியதில் அஃப்லாடோக்சின் அளவு அதிகமாக இருந்ததை வெளிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தனர். இந்த நிலையிலேயே, மொறவக்க பிரதேசத்துக்கு உட்பட்ட இப்பொருளின்...

யாழ் . சுப்பர்மடத்தில் மாவீரர் நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பொது நோக்கு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் , மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவு கூறுவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அதிகாரப்பகிர்வு குறித்து விவாதிக்க கொழும்பில் ஒன்றுகூடும் தமிழ்க் கட்சிகள்

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு அழைத்துள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பான பொதுவான கருத்தை எட்டுவது பற்றி விவாதிக்கும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தை இன்று மதியம் இரா.சம்பந்தனின் உறவினர் வீட்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

பொது போக்குவரத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அண்மைய வாரங்களில் ரயில் தாமதங்கள் அவதானிக்கப்படுவதாகவும் எனவே இந்தக் காரணியை கவனத்தில்கொள்ளுமாறு நிறுவனங்களின் தலைவர்களிடம்...

ஓமான் செல்ல முயன்ற யாழ்ப்பாண பெண்கள் இருவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போலியான பதிவு முத்திரைகளை பயன்படுத்தி இவர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யும் போது வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இரு பெண்களின் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட பாதுகாப்பு முத்திரை பொய்யாக...