Ad Widget

அதிகாரப்பகிர்வு குறித்து விவாதிக்க கொழும்பில் ஒன்றுகூடும் தமிழ்க் கட்சிகள்

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு அழைத்துள்ளார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பான பொதுவான கருத்தை எட்டுவது பற்றி விவாதிக்கும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தை இன்று மதியம் இரா.சம்பந்தனின் உறவினர் வீட்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதில் பங்கேற்குமாறு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருந்தது.

மேலும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் விவாதிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர் அடுத்த மாதம் அனைத்து தரப்பினருடனும் இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி இந்த விடயம் குறித்து விவாதிக்கவுள்ளன.

Related Posts