Ad Widget

யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறியவருக்கு சிறைத்தண்டனை!

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிள் ஓடிய இளைஞனுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்த பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றம் 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருந்த போது, வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மறித்த போது, பொலிஸாரின் சமிஞையை மீறி இளைஞன்...

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!

கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தற்கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கடந்த 8ஆம் திகதி பிலிப்பைன்ஸ்க்கும் வியட்நாமிற்கும் இடையே உள்ள கடலில்...
Ad Widget

கொடுப்பனவு கோரும் ஆசிரியர்கள்!

ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். வசதியான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு வருமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை...

4 மாணவர்களுக்கு இடைக்காலத் தடை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு மாணவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிழக்கு, கலாசாலை வீதியில் கடந்த 21 ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும், புது முக மாணவர்களுக்குமிடையில் கைகலப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது....

பொலிஸார் தாக்கினால் திருப்பி தாக்குவோம் – உறவுகள் ஆதங்கம்

இனிவரும் காலங்களில் பொலிஸார் தாக்கினால் தாமும் திருப்பி தாக்குவோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். பொலிஸார் இவ்வாறு நடந்துகொண்டமையால் எமது நீதிக்கான போராட்டம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்றும் உறவுகள் விசனம் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக...

யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக கூறி பெண்ணொருவர் ஒரு கோடி ரூபாய் மோசடி!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவிற்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தினை கடந்த ஏப்ரல் மாதம்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டுக்கு பாதுகாப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வு பிரிவினர் பெருமளவில் குவிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். அதேவேளை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தினை சிரமதானம் மூலம் துப்பரவு செய்ய...

யாழில் அத்துமீறி பாடசாலைக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய தந்தை கைது!

யாழில் யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்குள் ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட மாணவனின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் ஒருவலை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதன்போதே சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த சந்தேகநபரை கைது செய்யக்கோரி இன்றைய தினம் பாடசாலை ஆசிரியர்கள் பணி...

இலங்கை முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, ​​இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய்...

உக்ரைன் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் தென்பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டுள்ளது. சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். தாய் குழந்தையை பிரசவித்து ஒரு சில நிமிடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக...

தீவிரமடையும் போர் பதற்றம்! உக்ரைனுக்கு ஹெலிகாப்டர்களை அனுப்பிய பிரித்தானியா

உக்ரைனுக்கு ஆதரவாக முதல் முறையாக பிரித்தானியா ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் உக்ரைன் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இந்த ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனுக்கு மூன்று “சீ கிங்”( Sea King) ஹெலிகாப்டர்களை பிரித்தானியா அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், AFU 10,000...