Ad Widget

யாழ்ப்பாணத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நிலையில், கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் எதிர்வரும் 26ஆம் திகதியும் மாவீரர் நாள் மறுநாள் 27ஆம்...

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் தஞ்சம்!

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று (புதன்கிழமை) காலை தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு...
Ad Widget

செம்மணி நீரேந்து பகுதியில் கற்கள், மற்றும் கட்டிட இடிபாடுகளை போட்டு நிரப்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

யாழ்.செம்மணி வளைவு பகுதியை சூழவுள்ள நீரேந்து பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களை கற்கள், மண் மற்றும் கட்டட இடிபாடுகள் என்பவற்றை கொட்டி அப்பகுதியை மேடாக்கும் வேலைகள் முன்னெடுக்கப்படுகிறது. குறித்த நீரேந்து பிரதேசத்தினை மேடாக்கும் நடவடிக்கையால் , அயலில் உள்ள வயல்களில் நீர் தேங்கி நிற்பதனால் வயல்கள் அழிவடையும் நிலைமை காணப்படுகிறது. ஏற்கனவே அப்பகுதிகளை விஷமிகள் குப்பைகளையும்,...

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் யாழ்.மாநகர முதல்வருக்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ் மாநகர சபைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனையும், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனையும் சந்தித்துள்ளார். இதன்போது யாழ் மாநகர சபை அலுவலகத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு இடையில் கைக்கலப்பு!

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முகாமைத்துவ பீடத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் நான்காம் வருட மாணவர்களுக்கும் , முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பில் முடிவடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை...

யாழில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் ; ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கும்பல்

யாழில் உள்ள யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்குள் புகுந்து ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் நகரில் உள்ள...