Ad Widget

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விக்கிரமசிங்க-சம்பந்தன் உடன்படிக்கை வேண்டும் – சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய 6 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

யாழ். பல்கலையில் மாவீரர் தின நினைவேந்தல் ஆரம்பம்!!

மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள்...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் 120 மில்லியன் ரூபாய் மோசடி : சகோதரிகள் கைது

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 120 மில்லியன் ரூபாயை மோசடி செய்த இரு சகோதரிகள் யாழ்ப்பாணத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 30 மற்றும் 34 வயதுடைய யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இவர்கள் இருவரும் நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை 2021 ஜனவரி முதல்...

பருத்தித்துறையில் மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி !

பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடாத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள்...

நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம்!! – ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன்!

நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என ஜனாதிபதி முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்தி விசேட பிரிவு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அவர்கள்...

மாதத்திற்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தம்!!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய மாதத்தில் ஒரு முறை விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நேற்றமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(20.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை...

பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இலங்கையில் பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒருவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கம் பிறக்கும் போதே புதிய பிறப்புச் சான்றிதழில் பதியப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது காணப்படும் பெற்றோரின் திருமணம் தொடர்பான தகவல்களை பதிவு செய்யும் பகுதியும் நீக்கப்படவுள்ளது.

ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கையை பகிரங்கமாக அறிவித்த உக்ரைன் ஆயுதப்படை

உக்ரைனுடனான போர் தாக்குதலில் ரஷ்யா கிட்டத்தட்ட 84,210 வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைனிய ஆயுதப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த மற்றும் ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரை உக்ரைனிய படைகள் மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஒட்டுமொத்த ரஷ்யாவும், ஜனாதிபதி புடினும் தயாராக இருப்பதாக மாஸ்கோ அறிவித்து வருகிறது....