Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம்!

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொடூர சம்பவத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா...

புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்த அறிவிப்பு

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் (2023) ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி...
Ad Widget

யாழ்.மாவட்ட பண்பாட்டு விழாவும் விருது வழங்கல் நிகழ்வும்!

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் , வடமாகாண பண்பாட்டலுவல்கள் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) யாழில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தலைமையில் இடப்பெற்ற இவ்விழாவில் , பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்,எம்.சமன் பந்துலசேனவும்...

யாழில். இறந்தவர்களின் பெயரில் காணி உறுதி முடிப்பு! – ஒருவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் நகரில் போலியான உறுதி நிறைவேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட காணி மோசடி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரில் மறைந்த தம்பதியரின் சார்பில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியின் மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது...

ஆசிரியர் நியமனத்திற்கு போட்டிப்பரீட்சை

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 200 இற்கும் அதிகமானவர்கள், விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்று திரும்பி வரவில்லை....

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் தீபாவளி தினத்தன்று விடுதலை-டக்ளஸ்

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்....

பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் இதனைத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடியுடன் கூடிய மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி...

100 குழந்தைகள் பரிதாபமாக பலி! குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியான சம்பவம் உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில்,மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66 குழந்தைகளும் உட்கொண்ட சிரப் மருந்து இந்தியாவின் மைதன்...

ரஷ்ய குண்டு வீச்சு விமானங்கள் இடைமறிப்பு – அமெரிக்க போர் விமானங்களின் செயலால் பதற்றம்

ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அலாஸ்கா அருகில் இடைமறித்தாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) தெரிவித்துள்ளது. அலாஸ்காவிற்கு அருகில் பறந்த Tu-95 Bear-H ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் திங்களன்று அலாஸ்கன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததை அடுத்து அவை இடைமறிக்கப்பட்டதாக NORAD செவ்வாயன்று தனது அறிக்கை ஒன்றில்...