Ad Widget

மருத்துவ ஆலோசனையின்றி விருப்பத்தின் பேரில் சிகிச்சை பெற வேண்டாம் என வலியுறுத்து!

நாட்டில் அண்மைய காலமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவ ஆலோசனையின்றி விருப்பத்தின் பேரில் சிகிச்சை பெற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். டெங்கு, கொரோனா, இன்புளுவன்சா மற்றும் பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் தற்போது பரவி வருவதால், அவற்றை சரியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க...

குரல் பதிவு மூலம் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் செல்போன் செயலி!!

உலக நாடுகளில் இருந்து கொரோனா தொற்று இன்னும் நீங்காத நிலையில், இந்த தொற்றை எளிமையாக கண்டறிய செல்போன் செயலி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலி நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்யும். அதாவது குறிப்பிட்ட நபரின் மருத்துவ வரலாறு, புகைபிடிக்கும் நிலை போன்ற சில...
Ad Widget

இன்று முதல் ஒரு மணி நேர மின்வெட்டு – நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

நேற்று (05) முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாடிக்கையாளர்கள் கடன் அட்டைகள் உட்பட அனைத்து இலத்திரனியல் அட்டைகளையும் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலனி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கான அனைத்து பண கொடுப்பனவுகளையும் இலத்திரனியல் அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது...

இலங்கைக்கு கிடைக்கும் பல கோடி அமெரிக்க டொலர்கள்!

சமூர்த்தி பயனாளிகள், வயோதிபர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான இந்த வருட கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் ஐயாயிரத்து 200 கோடி ரூபாவை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 14 கோடி 50 இலட்சம் டொலர்கள் இந்த வருடத்தின் முதல் ஆறுமாத கால பகுதியில் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகவும் இது தவிர ஆசிய...

கடும் மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை வௌியீடு!!

கடும் மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஐ.நாவில் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ரெலோ – சிறிகாந்தா குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ரெலோ அமைப்பினர் நடத்திய பேச்சு, இராஜதந்திரமற்ற நடவடிக்கை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா விமர்சித்துள்ளார். இம்முறை ஜெனிவாவில் எப்படி தப்பிப்பது என்று அரசாங்கம் சிந்தித்துவரும் இந்த சூழலில் தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் பற்றி பேசுவதற்கு இது உகந்த காலமில்லை என்றும் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் தரப்புடன் தொடர்ந்தும்...

நாட்டில் சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக லங்கா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பொருளாதார நிலைமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதற்கு மற்றுமொரு காரணம் என அந்தச் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர்...

முதலைகளின் அச்சுறுத்தலால் ஆற்றின் குறுக்கே வேலி!

யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து சந்நிதி முருகனை வழிபட்டு வருகின்றனர். ஆலயத்திற்கு வருவோரில் பெரும்பாலானோர் தொண்டைமானாற்றில் நீராடியே...

உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு!

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் கே.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 04ஆம் திகதி இடம்பெவுள்ளது. அத்துடன், டிசம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் கல்விப்...

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு – புதிய விலை குறித்த அறிவிப்பு!

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விலை குறைப்பு தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி, குறித்த விலை குறைப்பு இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்கமைய, 12.5 கிலோ கிராம்...

எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. செல்லுபடியற்ற QR ஐ பயன்படுத்தி, எரிபொருள் பெறுவதற்கு முயன்ற நிலையில் முகாமையாளர் எரிபொருள் வழங்க மறுத்துள்ளார். இந்த நிலையில், சந்தேக நபர் ஒருவர் எரிபொருள் நிலையத்திற்குள் அத்துமீறி உள் நுழைந்து முகாமையாளரை தாக்க...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!

இன்று (05) திங்கட்கிழமை 02 மணித்தியாலங்ளுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்து இல்லை !!

மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார...

தொலைபேசி சேவைக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி, லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்கள் மற்றும் பிற ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட்...

கோட்டாபய ராஜபக்சவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க முடிவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலில் தொடர தீர்மானித்தால் அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப்பட்டியல் ஆசனமொன்று வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ச அரசியலில் தொடரும் எண்ணம் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அறம்பேபொல,...

நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் பண மோசடி முறைப்பாடு!!

நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த சுவிட்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் பண மோசடி முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். குறித்த பெண்ணிடம் நடிகர் பிரசாந்த் ரூ.10 இலட்சம் பண மோசடி செய்திருப்பதாக கூறி பாண்டிபஜார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக...

கனடாவில் கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி!

கனடாவின் மத்திய மாகாணமான சஸ்கட்ச்வான் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பத்து பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் ஜேம்ஸ் க்ரீ நேஷன் மற்றும் வெல்டொன் ஆகிய பகுதிகள் உள்ளிட்ட 13 இடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்....

அமெரிக்காக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!!

உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ஆயுதங்களை வழங்குவதற்கு எதிராக அமெரிக்காவை ரஷ்யாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் எச்சரித்துள்ளார். அந்த நாட்டின் துணை வெளியுறவு மந்திரி செர்ஜியோ ரியாப்கோவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். ரஷ்ய அரசின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கருதும் நாட்டின்...

வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு

வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்குத் தேவையான டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க முடியுமென நம்புவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். இதற்காக மிகவும் குறைந்த தொகையான 15...
Loading posts...

All posts loaded

No more posts