Ad Widget

ஐ.நாவில் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ரெலோ – சிறிகாந்தா குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ரெலோ அமைப்பினர் நடத்திய பேச்சு, இராஜதந்திரமற்ற நடவடிக்கை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா விமர்சித்துள்ளார்.

இம்முறை ஜெனிவாவில் எப்படி தப்பிப்பது என்று அரசாங்கம் சிந்தித்துவரும் இந்த சூழலில் தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் பற்றி பேசுவதற்கு இது உகந்த காலமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் தரப்புடன் தொடர்ந்தும் பேசுகிறோம், கூட்டாக செயற்படுகிறோம் என ஐ.நா.விற்கு காட்டிக்கொள்ள அரசாங்கத்திற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றமிழைத்தவர்கள் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்பதை தமிழர் தரப்பு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

அதற்கு மாறான அல்லது பலவீனப்படுத்தும் எந்த செயற்பாடும் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பொறுப்போடு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts