Ad Widget

சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று, கோபுரத்தை பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் உள்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நேற்று கிடைத்த வருமானம் புதிய சாதனையை எட்டியுள்ளது. அதற்கமைய, திறக்கப்பட்ட முதல்...

ரஷ்யாவின் கொடூர முகம் – கொத்துக் கொத்தாக மீட்கப்படும் சடலங்கள்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து Izyum புதைகுழியில் இருந்து 440 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட உக்ரேனிய நகரமான Izyum இல் சுமார் 440 சடலங்கள் அடங்கிய வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கார்கிவ் பிராந்தியத்திற்கான தலைமை பொலிஸ் புலனாய்வாளர்...
Ad Widget

பாடசாலைகளுக்கு விடுமுறை!!

எதிர்வரும் 19 ம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளது எதிர்வரும் 19 ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீண்ட நேர மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு – மின்சார சபை எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக நுரைச்சோலை லக்விஜய (Lakvijaya) நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

யாழ். பல்கலையிலும் திலீபனின் நினைவுநாள் அனுஷ்டிப்பு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம், இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு, தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணியளவில் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது தியாக தீபம் தீலிபனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து...

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் இன்று ஆரம்பம்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின....

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்காக திறப்பு!!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை இன்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாவனைக்காக தாமரை கோபுரம் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு நுழைவுச்சீட்டுக் கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் என்றும்...

எதிர்வரும் வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல்!!

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் அவர்...

மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக்குறைவாக பேசிய டயானா கமகே! பதிலடி கொடுத்த சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னார் மாவட்டத்திற்கென தனித்துவமான கலை கலாச்சாரம் உண்டு.எனினும் மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக்குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்பு எவ்வித அருகதையும் இல்லை எனவும், அவரது கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை(14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த...

மகாராணியாரின் சவப்பெட்டியின்மீது வானிலிருந்து விழுந்த ஒளிக்கதிர்

பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது. மகாராணியாரின் சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles' தேவாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தற்போதைய மன்னரான சார்லஸ் அந்த பெட்டியின் பின்னால்...

வெற்றியை கொண்டாடும் உக்ரைன் இராணுவம்!!

உக்ரைன் இராணுவம் ரஷ்யாவிற்கு எதிரான சமீபத்திய வெற்றிகளைக் குறிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளது. அதில், துருப்புக்கள் சண்டையிடுவதையும், குடியிருப்பாளர்கள் தங்கள் விடுதலையாளர்களை மீண்டும் வரவேற்பதையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு இந்த காணொளியை வெளியிட்டுள்ளது. World, prepare for the Victory of a nation that puts Freedom above all else!...

தாமரை கோபுரத்தை பார்வையிட சீனர்களுக்கு இலவசம்? – போலி நுழைவுச்சீட்டு குறித்து சீன தூதரகம் விளக்கம்!

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலியான நுழைவுச்சீட்டு ஒன்று சமூகத்தில் பரவி வருவதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம், சமூக ஊடகங்களில் பரவும் நுழைவுச்சீட்டு போலியானது என்றும் அதை சமூக ஊடகங்களில் பகிரும் முன் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. எவ்வாறாயினும் தாமரை கோபுரம் குறித்த இலவச விளம்பரத்திற்கு...

தொழில் தேடுவோர் அல்லது சுயதொழில் ஆரம்பிக்க இருப்போருக்கு மாவட்ச் செயலரின் விசேட அறிவிப்பு!!

தொழில் தேடும் இளைஞர், யுவதிகள் அல்லது சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்க முயற்சிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு யாழ்.மாவட்டச் செயலர் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, யாழ்.மாவட்டச் செயலகமானது மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில்...

அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை அதிகரிப்பு!

40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. 120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து 225 ஆகவும் 80 பக்க புத்தகம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை 40 பக்க CR...

தற்காலிகமாக ஓட்டுநர் உரிமத்தின் காலம் நீடிப்பு!

6 மாத காலத்திற்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை ஓராண்டு காலத்திற்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. மாவட்ட அலுவலகத்திற்கோ அல்லது கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கோ வந்து ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பளை பிரதேசத்தில் உள்ள காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படவில்லை – டக்ளஸ்

பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களின் இவ்வாறான அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுமபோது ஊடக நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென...

வட்டுக்கோட்டையில் வாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் உள்ள கோவில் ஒன்றிலிருந்து 11 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மீட்கப்பட்ட அனைத்து வாள்களும் கோயில் பாவனையில், கோவிலின் உள்ளேயே இருந்துள்ளதாகவும், வாள்கள் கோவில் சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுபவை எனவும் விசாரணையில்...

தாமரை கோபுர நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிப்பு!!

தாமரைக் கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக நுழைவுச்சீட்டு ஒன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவசமாக கட்டணம் செலுத்தாது பிரவேசிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் பிரஜைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் 500 ரூபா கட்டணமும், வரையறையில்லா அடிப்படையில் 2000 ரூபா கட்டணமும் அறவீடு செய்யப்படும்...

பாடசாலை மாணவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – பெற்றோர்களுக்கு அவசர அறிவிப்பு

கோவிட் நோய் தவிர, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என அரச மருத்துவ அலுவலர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அது குறித்து மேலும் பேசிய அவர், "இப்போது பலர்...

கொழும்பில் இருந்து திருகோணமலை சென்ற ரயிலில் தீ!!!

கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த விரைவு ரயிலின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தமையால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் வேயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த ரயில்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய சிவப்பு நிற ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன. . தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்...
Loading posts...

All posts loaded

No more posts