Ad Widget

தென்னிலங்கையில் உள்ள தமது சொத்துக்களை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறார்கள்!!

தியாகி திலீபனின் நினைவேந்தலை 2016ம் ஆண்டு நடத்தியவர்கள் நாங்கள், 2017ம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து நினைவேந்தலை நடத்த கேட்டது தமிழ் காங்கிரஸ், 2018ம் ஆண்டு யாழ்.மாநகரசபை செய்தது. பின்னர் இரு வருடங்கள் சீராக நடக்கவில்லை. பின்னர் எப்படி 6 வருடங்களாக தியாகி திலீபனின் நினைவேந்தலை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நடத்தியது?மேற்கண்டவாறு ஜனநாயக போராளிகள் கட்சியின்...

நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்கள் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – ஐங்கரநேசன்

திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடகச் சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தியாக திலீபன் நினைவேந்தல் குழப்பங்கள் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,...
Ad Widget

யாழ். போதனா வைத்திய சாலையில் கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன. அவை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 21 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது குறித்த இளைஞனிடம் இருந்து 21 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார்...

யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை சென்றடைந்தமை குறிப்பிடதக்கது

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள்!

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். எட்டு சதவீதமாக இருந்த வட் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இரண்டரை சதவீத சமூக...

திலீபன் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பம்: ஊடங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம் எனவும் எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க. சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும்...

தொழில்முனைவோருக்கு கடன் நிவாரணம் – அரசாங்கம் விசேட நடவடிக்கை

தொழில்முனைவோரின் கடன் தவணைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அரச வங்கிகளின் தலைவர்களுக்கு இராஜாங்க நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அரச வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சகத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அரச வங்கியின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவித்தல்...

உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதியில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகு, 93.11 சதவீத வாக்காளர்கள் ரஷ்ய இணைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், இது ஒரு முதற்கட்ட முடிவு என்று...