Ad Widget

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனி ஒரு கிலோவுக்கு 40 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், தாவர எண்ணெய்யின் விலை சுமார் 250 ரூபாவினால் குறைந்துள்ளது. மேலும் தற்போதைய பொருளாதார...

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து...
Ad Widget

யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும்...

திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேரைக் கொண்ட பொதுக் கட்டமைப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்ள பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் கடந்த (சனிக்கிழமை)நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நேற்றைய தினம்...

லிட்ரோ நிறுவனம் முன்னெடுத்துள்ள புதிய நடவடிக்கை!!

புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை கருத்திற்கொண்டு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி, வெளிநாட்டில் இருந்தவாரே உள்நாட்டு எரிவாயுவை பதிவு (Oder) செய்வதற்கான மென்பொருள் செயலியை (Home Delivery App) லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மென்பொருள் பயன்பாட்டின்படி, வெளிநாட்டில் இருந்தவாரே லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவை அமெரிக்க டொலர்களில்...

பிரித்தானியாவில் இந்து ஆலயம் மீது தாக்குதல் – 46 பேர் வரையில் கைது

பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்டது. இதனை தொடர்ந்து...

இலங்கையர்களை சித்திரவதை செய்த ரஷ்ய படைகள்!!

உக்ரேனில் மீட்கப்பட்ட ஏழு இலங்கையர்கள் ரஷ்ய படையினரால் தாம் சித்திரவதை செய்யப்பட்ட விதத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட ஏழு இலங்கையர்கள் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்தில் குப்யன்ஸ்கில் இருந்ததாக கார்கிவ் ஒப்லாஸ்டில் உள்ள தேசிய காவல்துறையின் புலனாய்வுத் துறையின் தலைவர் Serhii Bolvinov தெரிவித்தார். இந்த குழுவின்ர் மே மாதம் கார்கிவ் நகரை கால்நடையாக...