Ad Widget

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனி ஒரு கிலோவுக்கு 40 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், தாவர எண்ணெய்யின் விலை சுமார் 250 ரூபாவினால் குறைந்துள்ளது.

மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் அதிக விலைக்கு தின்பண்டங்களை கொள்வனவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts