Ad Widget

மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் 13 அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு

மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்துவரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். சந்திப்பின்போது, 13 அரசியல் கைதிகள் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...

திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் அமைச்சரவையில் பிரஸ்தாபிப்பு

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஆலயத்தின் புனிதத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதான செய்திகள் தொடர்பாக இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். கடற்றொழில் அமைச்சரின் கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி,...
Ad Widget

அலி சப்ரியின் கருத்துக்கு கடும் கண்டனம்!

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல்...

அரசியல் தீர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

வடக்கு – கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டத்தின் 44 நாளாவது நாள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு – கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி 44 ஆவது நாளான இன்று கிளிநொச்சி கோரக்கன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்றது. வடக்கு...

இறக்குமதி தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும்!

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது, ​​அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார். தற்காலிக நடவடிக்கையாக சில பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ்...

மலசல கூடம் பராமரிப்பி இன்றி, பாவனைக்கு உதவாத நிலையில்!!

நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளமையால் இயற்கை உபாதைகளுக்கு உள்ளாவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது...

ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள் நாட்டை வந்தடைந்தன!

ஆறாவது தடவையாக ஆசியக் கோப்பையை சுவீகரித்த இலங்கை கிரிக்கட் வீரர்களும், ஆறாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத்தில் ராணியாக முடிசூடிய இலங்கை வலைப்பந்தாட்ட வீரர்களும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இரண்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டை வந்தடைந்த இரு குழுக்களும்...

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என எச்சரிக்கை!

பலவீனமான விவசாய உற்பத்தி, விலைவாசி உயர்வு மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் எச்சரித்துள்ளன. 6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், போதுமான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை...

இலங்கையில் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை!

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு குறித்த அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் இராணுவம்!!

உக்ரைனின் இராணுவம் வடக்கில் உள்ள கிராமங்களை கைப்பற்றி ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவியதாக கெர்கீவ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி விட்ராலி கான்செவ் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக கூறியுள்ள ரஷ்யா, கெர்கீவ் பிராந்தியத்திலுள்ள இரண்டு நகரங்களில் இருந்து தமது படைகள் பின்வாங்கியுள்ளதையும் உறுதி செய்துள்ளது. உக்ரைனில் கடந்த...