Ad Widget

எரிபொருள் விலைகளில் இன்று மாற்றம் இல்லை!!

எரிபொருள் விலைகளில் இன்றைய தினம்(1) திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் – சரத் பொன்சேகா

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான விலைமானுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்....
Ad Widget

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்பதால், பொது மக்கள் அவதானமாக இருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் சப்ரகமுவ,மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருதால் ஆற்றங்கரையோரங்களை அண்டி வசிக்கும் மக்கள்...

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை!!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா காவற்துறை அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ‘மொரிஸ்’ என்றழைக்கப்படுகின்ற செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா இலக்கம் ஒன்று நீதிமன்றத்தில் நீதவான் மாபா பண்டார...

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்!!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டு உயர்தரத்துக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எண்ணை தாங்கி மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று (31) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது. காணியில் நிலத்தில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற...

பொன்னாலை – பருத்தித்துறை வீதி முற்றாக திறப்பு!

கீரிமலை ஊடான பொன்னாலை - பருத்தித்துறை வீதியினை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கடந்த 30 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் குறித்த வீதி காணப்பட்ட நிலையில் கடந்த நல்லாட்சி கால பகுதியில் அப்பகுதி மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு வீதியும் திறந்து...

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் நேற்று புதன்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை, மன்று இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும்...

இன்று முதல் நடைமுறைக்கு வரும் VAT வரி அதிகரிப்பு..! வெளியாகியுள்ள தகவல்

VAT அல்லது பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்றைய தினம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பித்திருந்தார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் VAT வரியை அதிகரிப்பது குறித்த யோசனையை...

தலைதெறிக்க ஓடிய ரஷ்ய படைகள்!!

கெர்சன் பகுதியில் உள்ள ரஷ்ய துருப்புக்களை ஓடு அல்லது செத்து மடி என உக்ரைன் கடுமையான எச்சரித்துள்ளது. இது குறித்து உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள காணொளியில் ரஷ்ய வீரர்கள் தப்பி ஓடுவதைக் காட்டுகிறது. தற்போது கெர்சன் ஒப்லாஸ்டில் உள்ள ரஷ்ய விருந்தினர்களுக்கு ஒரு செய்தி என்று அந்த காணொளியில் கூறப்பட்டுள்ளது. உக்ரேனிய...